பிரபல பஞ்சாபி நடிகை மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்…

 
நடிகை மரணம்

பழம்பெரும் பஞ்சாபி பிரபல நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 69. மூத்த பஞ்சாபி திரைப்பட நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா 1970கள் மற்றும் 1980களில் பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.   அவர் தாஜ், கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷாகினன் தா, இஷாக் நிமானா, லாஜோ, பட்வாரா, வைரீ ஜாட், படோலா, கீ பானு துனியா டா, சோஹ்னி மஹிவால், ஜக்கா டகு மற்றும் அனக் ஜட்டன் டீ போன்ற பல படங்கள் மூலம் திரையுலகில் பிரபலமானார். தல்ஜீத் கவுர் கங்குரா இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படித்தார்.

நடிகை மரணம்

சாலை விபத்தில் கணவர் ஹர்மிந்தர் சிங் தியோலை இழந்த பிறகு தல்ஜீத் கவுர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 இல், அவர் மீண்டும் தொழில்துறையில் அடியெடுத்து வைத்தார்.

பஞ்சாபி நடிகை

இந்நிலையில் பஞ்சாபின் ராய்கோட்டில் வசித்து வந்த அவர் உடல் நல குறைவு காரணமாக காலமானார். தல்ஜீத் கவுரின் மறைவு பஞ்சாப் திரை உலகத்தில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர்   இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web