பிரபல நடிகர் நெடும்புரம் கோபி உயிரிழப்பு!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
நெடும்புரம் கோபி

‘காழ்ச்சா’ படத்தில் மம்முட்டியின் அப்பாவாக நடித்த நெடும்புரம் கோபி காலமானார். அவருக்கு வயது 85.2004-ம் ஆண்டு பிளஸ்சி இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘காழ்ச்சா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெடும்பராம் கோபி. இந்தப் படத்தில் மம்மூட்டிக்குத் தந்தையாக நடித்திருந்தார். 

rip

அதனைத் தொடர்ந்து காவ்யா மாதவனின் சீலாபதி, சுரேஷ் கோபியின் அஸ்வாரூடன், ஆனச்சந்தம், தனியே, ஆனந்தபைரவி, உற்சாககம்மிட்டி என 15 திரைப்படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக அலிஃப் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவில்லாவைச் சேர்ந்த நெடும்பராம் கோபி, கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மறைந்த கோபியின் மனைவி கமலாம்மா ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இவர்களுக்கு சுனில் ஜி.நாத் என்ற மகனும் சுனிதா, சுபிதா என்ற மகள்களும் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web