பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்! உடற்பயிற்சியால் மரணமடைந்த 3வது நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி!

 
சித்தாந்த்

பிரபல சின்னத்திரை நடிகர் சித்தந்த் வீர் உடற்பயிற்சிக் கூடத்தில் மாரடைப்பால் காலமானார். உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது, மாரடைப்பால் உயிரிழக்கும் மூன்றாவது நடிகர் என்பதால், திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இப்படி ஜிம்மில், உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது உயிரிழந்த மூன்று நடிகர்களுமே தங்களது உடல் நலனில் அதிகளவு அக்கறை எடுத்துக் கொண்டவர்கள். எப்போதுமே ஃபிட்டாக, உடலை உறுதியாக வைத்திருப்பவர்கள். நடிகர்  புனித் ராஜ்குமார் இத்தனை சீக்கிரத்தில் மரணமடைந்தார் என்பதை இன்னமும் கன்னட திரையுலகில் யாரும் நம்பவில்லை. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. அதன் பின்னர்,  இந்தி திரையுலகின் காமெடி நடிகர் இப்படி உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். சமீபகாலமாக இளவயதில் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தந்த் வீர் . இவருக்கு வயது 46. இவரின் மனைவி மாடல் அலெசியா ராட். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 2 குழந்தைகள். இவர்சூர்யவன்சி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

 சித்தந்த் வீர் சூர்யவன்சி

அப்போது திடீரென நெஞ்சுவலி காரணமாக மயங்கி கீழே விழுந்தார்.உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  நடிகர் ஜெய் பானுஷாலி இன்ஸ்டாகிராமில் சித்தாந்த் மறைவை ஒட்டி இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சித்தாந்த் மிக விரைவில் சென்றுவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். ஆனந்த் சூர்யவன்ஷி என்ற  சித்தாந்த் வீர் சுர்ரியவன்ஷி, குசும் நாடகத்தில் அறிமுகமானவர்.

இவருடைய நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.   கசௌதி ஜிந்தகி கே, கிருஷ்ணா அர்ஜுன், க்யா தில் மே ஹை போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக, கியூன் ரிஷ்டன் மெய் கட்டி பட்டி மற்றும் ஜித்தி தில் நாடகத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சித்தான்த்தின் முதல் மனைவி  ஈரா.2015ல் ஈராவை விவாகரத்து செய்த பின்னர்2017 ல் அலெசியாவை மணந்து கொண்டார். ஈராவிற்கு பிறந்த மகள் மற்றும் அலெசியாவுக்கு பிறந்த மகனுடனும் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web