பிரபல நடிகை சிகிச்சைப் பலனளிக்காமல் மரணம்! முதல்வர் இரங்கல்!

 
சோனாலி சக்கரவர்த்தி

பிரபல பெங்காலி நடிகை சோனாலி சக்ரவர்த்தி இவருக்கு வயது 59. சோனாலி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 2 மகள்கள். இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெங்காலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் சோனாலி சக்ரவர்த்தி.

சோனாலி சக்கரவர்த்தி

இவர் பல காலமாக  கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.  சோலங்கி ராய் மற்றும் கவுரப் சட்டர்ஜி வரிசையில் முன்னணியில் இருந்த பிரபல பெங்காலி நிகழ்ச்சியான காட்சோராவில் சோனாலி ஒரு பகுதியாக இருந்து வந்தவர். சோனாலியும் அவரது கணவர் ஷங்கர் சக்ரவர்த்தியும் பல பெங்காலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
rip

நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர். அத்துடன் பிரபல பெங்காலி திரைப்படங்களான  தாதர் கீர்த்தி , ஹர் ஜீத் மற்றும் பந்தன் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. சோனாலி சக்கரவர்த்தி மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web