மதபோதகராக மாறிய பிரபல நடிகை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
மோகினி

1991-ம் ஆண்டு இயக்குநர் கேயார் இயக்கத்தில் வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மோகினி. இதனைத் தொடர்ந்து 'புதிய மன்னர்கள், 'நாடோடி பாட்டுக்காரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். 90-களின் காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார். இவருக்கு நீல நிற கண் என்பதால் பூனை கண்ணழகி எனவும் அழைக்கப்பட்டார்.

மோகினி

தமிழ், மலையாளம், மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மோகினி நடித்துள்ளார்.1976-ம் ஆண்டு தமிழ் பிராமண குடும்பத்தில் மகாலட்சுமி என்ற பெயருடன் பிறந்தவர் சினிமாவில் மோகினியாக அறிமுகம் செய்யப்பட்டார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த இவர், சன் தொலைக்காட்சியில் காதல் பகடை, ராஜராஜேஸ்வரி , ஒரு பெண்ணின் கதை போன்ற சீரியல்களில் நடித்தார். கதனார் கடம்பத்து கதனார் என்கிற மலையாளத் தொடரிலும் மோகினி நடித்துள்ளார். பின்பு பரத் என்பவரை மணந்துகொண்டு, அமெரிக்காவில் குடியேறினார்.

அந்த காலத்தில் 90களில் பிறந்த இளைஞர்களுக்கு புத்துணர்வை கொடுத்த காதல் டிராமா திரைப்படமாக ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் அறிமுகமான மோகினி தம்முடைய முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களை அள்ளினார்.

மோகினி

இதனைத் தொடர்ந்து நடிகை மோகினி, 'புதிய மன்னர்கள், 'நாடோடி பாட்டுக்காரன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக இவருக்கு இருந்த பச்சை நிற கருவிழி இவருடைய ரசிகர்களிடையே இவர் இன்னும் பிரபலமாவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

பின்னர் பரத் என்பவரை 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறிய மோகினி, 2006-ம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். இந்த நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்ட மோகினி, அமெரிக்காவில் கிறிஸ்த்துவ மதபோதகராக மாறியுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். மோகினிக்கு அனிருத், அத்வைத் என்ற இரு மகன்கள் உள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?