73 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரபல நடிகை!!

 
லீனா ஆண்டனி

மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகையாக இருக்கும் லீனா ஆண்டனி தற்போது 10ம் வகுப்பு தேர்வை எழுதி அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளார். இதன் மூலம் இளம் சமுதாயத்தினருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் தேர்வு குறித்த பயத்தை போக்கியுள்ளார்.

லீனா ஆண்டனி

மலையாள திரையுலகில் 13 வயதில் கால் பதித்தவர் லீனா ஆண்டனி (வயது 73). இதுவரை நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் ஜோ அண்ட் ஜோ, மகேஷிண்டே பிரதிகாரம், 'மகள்' உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் ஆண்டனி  நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு காலமானார்.


நடிகை லீனா ஆண்டனி சிறுவயதில் எழுதிய 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் நடிகையாகி பிசியாவிட்டதால் விட்டுபோன படிப்பை தொடர முடியவில்லை. எனவே தற்போது 73 வயதிலும் லீனா ஆண்டனி 10-வது வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி எப்படியாவது தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்று முனைப்புடன் படித்தார்.

லீனா ஆண்டனி

அதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வும் எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவது வழக்கம். அதே பாணியில் தற்போது நான் 10வது தேர்வு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வை எழுதினேன்’’ என்று கூறினார்.தேர்வு பயத்தால் இளம் வயதில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் 73 வயதில் 10ம் வகுப்பு தேர்வை எழுதி அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web