பிரபல பெண் எழுத்தாளர் காலமானார்!! வாசகர்கள் அதிர்ச்சி!!

 
ஜோத்ஸ்னா

பிரபல பெண் எழுத்தாளர் ஜோத்ஸ்னா காமல் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பெண் எழுத்தாளர் ஜோத்ஸ்னா காமல் பெங்களூரில் வசித்து வந்தார். 1937ம் ஆண்டு பிறந்த இவர் டாக்டர் கிருஷ்ணானந்த் எல்.காமத்தை 1966ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விகாஸ் காமத் என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

ஜோத்ஸ்னா காமத், எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் மற்றும் அகில இந்திய வானொலியில் முன்னாள் இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர். 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி பிரபலமானவர் ஜோத்ஸ்னா காமத்.வரலாறு, நாட்டுப்புறவியல் மற்றும் நகைச்சுவை என பல்வேறு தலைப்புகளில் இவரின் படைப்புகள் 3 மொழிகளில் வாசகர்களால் வாசிக்கப்பட்டு வந்தன. இவரின் படைப்புகள் பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றன.

rip
அதன்படி கடந்த 1988ம் ஆண்டு கர்நாடகா பரம்பரே என்ற புத்தகத்திற்காக இலக்கிய அகாடமி விருதை பெற்றார். அதற்கு அடுத்தபடியாக மின்னணு ஊடகங்கள் மற்றும் கன்னடமொழி மற்றும் இலக்கியத்திற்கான அசாதாரண பங்களிப்புக்காக 1991ம் ஆண்டு ராஜ்யோத்சவா விருதை பெற்றார். பின்னர் 1995 மற்றும் 96ம் ஆண்டுக்கான சிறந்த கன்னட பெண் எழுத்தாளர் மற்றும் கே.ஷமாராவ் உதவித் தொகை விருதையும் ஜோத்ஸ்னா காமத் பெற்றார். இவரது எழுத்தை வாசிக்கும் வாசகர்கள் அதிகளவில் இருந்து வந்தனர்.

பல்வேறு சாதனைகளை புரிந்த பெண் எழுத்தாளர் ஜோத்ஸ்னா காமத் உடல்நலக்குறைவு காரணமாகவும் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவால் எழுத்தாளர்கள் மற்றும் அவரது வாசகர்கள் அதிர்ச்சியடைந்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web