பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு!! முதல்வர் இரங்கல்!!

 
புலக் கோகோய்

அசாமிய கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான புலக் கோகோய் 84 வயதில் காலமானார்

அஸ்ஸாமில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புலக்கோகோய். இவர் புகழ்பெற்ற ஓவியரும் கூட இவர் கௌஹாத்தியில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இவருக்கு வயது 84. இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

புலக் கோகோய்

அந்த வகையில் அஸ்ஸாம் முதல்வர் “கலாச்சார உலகின் முக்கிய நபரான புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் புகழ்பெற்ற ஓவியரும் கார்ட்டூனிஸ்டுமான புலக் கோகோய் உயிரிழந்தார் என்பது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது இழப்பு கலையுலகில் ஈடு செய்ய முடியாதது  என தெரிவித்துள்ளார்.

rip
 புலக்கோகோய், 1963 முதல் 1964 வரை கார்ட்டூனிஸ்ட் துறையில் தம்முடைய பணியை தொடங்கி  தி அஸ்ஸாம் ட்ரிப்யூன் குழுமத்தில் சேர்ந்தார். 1967ல், ‘கார்ட்டூன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.  கோகோய் சாடின், அபிகல் போன்ற பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் சுதந்திரமான அரசியல் கார்ட்டூன்களை வரைந்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக  சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 2013 ல் பிராக் சினி விருதுகளில் ‘மோம்தாஜ்’ படத்திற்காக அசாமிய திரைப்பட பிரிவில் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web