பிரபல ஹோட்டல் உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு!! திடுக்கிடும் தகவல்கள்!!

 
அமித்ஜெயின்

பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூவிற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர்  அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவரை உயிரிழந்த நிலையில் மீட்டு அவர் பட்பர்கஞ்ச், மேக்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

ரேடிசன் ப்ளூ
முதல் கட்ட தகவல்  அறிக்கையில், காமன்வெல்த்தில் உள்ள அழைப்பாளரின் வீட்டிற்கு ஜெயின் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சனிக்கிழமை நவம்பர் 19ம் தேதி காலை நொய்டாவில் உள்ள தனது புதிய வீட்டில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு காமன்வெல்த் வீட்டிற்கு வந்த அமித்ஜெயின்  விரைவில் தனது குடும்பத்துடன் தனது புதிய வீட்டிற்கு மாற உள்ளதாக தெரிவித்திருந்தார். 

தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை
காஜியாபாத்தில் உள்ள தனது அண்ணன் கரனை அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டு காமன்வெல்த் வீட்டிற்கு தனியாக சென்றதை  டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.அடுத்த சில மணி நேரத்தில் வேறு  சில பொருட்களை எடுக்க CWG கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்த ஜெயின் மகனும் அவர்களது ஓட்டுநரும் ஜெயின்  தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web