பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

 
கவுர்

பிரபல நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது  69. நடிகை தல்ஜீத் கவுர் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூத்த  பஞ்சாபி  திரைப்பட  நடிகை  தல்ஜீத்  கவுர்  கங்குரா  1970கள்  மற்றும்  1980களில்  பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.


அவர் தாஜ், கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷாகினன் தா, இஷாக் நிமானா, லாஜோ, பட்வாரா, வைரீ ஜாட், படோலா, கீ பானு துனியா டா, சோஹ்னி மஹிவால், ஜக்கா டகு மற்றும் அனக் ஜட்டன் டீ போன்ற பல படங்கள் மூலம் திரையுலகில் பிரபலமானார். தல்ஜீத் கவுர் கங்குரா இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படித்தார்.

நடிகை மரணம்

சாலை விபத்தில் கணவர் ஹர்மிந்தர் சிங் தியோலை இழந்த பிறகு தல்ஜீத் கவுர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001ல்,  அவர்  மீண்டும்  தொழில் துறையில்  அடியெடுத்து  வைத்தார். 

இந்நிலையில் பஞ்சாபின் ராய்கோட்டில் வசித்து வந்த அவர் உடல் நல குறைவு காரணமாக காலமானார்.  தல்ஜீத் கவுரின்  மறைவு பஞ்சாப்  திரை உலகத்தில்  மிகப் பெரிய  இழப்பை  ஏற்படுத்தியுள்ளது.  அவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web