பிரபல மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்!

 
தெளிவத்தை ஜோசப்

பிரபல மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நேற்று முன் தினம் காலமானார்.  அவருக்கு வயது 88. சாகித்ய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப், இலக்கிய ஆய்வாளராக, ஈழத்தின் சிறுகதையாளராக, நாவலாசிரியராக இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் கவனிக்கத்தக்க, தவிர்க்க முடியாதவராக இருந்து வந்தார். 

தெளிவத்தை ஜோசப்

1960களில் எழுத தொடங்கிய தெளிவத்தை ஜோசப், 70களில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மிளிர்ந்து, தனக்கென வாசகர்களை கொண்டிருந்தார். 

1934ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார் ஜோசப், தமிழகத்தில் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் படித்த பின்னர், மீண்டும் இலங்கைத் திரும்பி, பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் படித்தார்.

திரு. ஜோசப், ஆரம்பத்தில் தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.

தெளிவத்தை ஜோசப்

தமது படைப்புக்களுக்காக சாகித்திய அகதெமி விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2013) சாகித்திய ரத்னா (2014) போன்ற விருதுகள் கிடைத்துள்ளன. இவரது நாவல்களில், ‘காலங்கள் சாவதில்லை’ இன்றளவும் வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது  ‘குடை நிழல்’ என்ற புதினம் 2010ம் ஆண்டுக்கான யாழ்ப்பாண இலக்கியப் பேரவையின் விருதைப் பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web