பிரபல பாடகி மரணம்! மெலடிகளின் ராணி மறைந்தார்! முதல்வர் இரங்கல்!

 
நிர்மலா மிஸ்ரா

பிரபல வங்காள மொழி திரையிசைப் பாடகி நிர்மலா மிஸ்ரா நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த அனுதாபத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெங்காலி மற்றும் ஒடியா மொழிகளில் பிரபலமான பாடகியாக திகழ்ந்த நிர்மலா மிஸ்ரா மாரடைப்பு காரணமாக நேற்று செட்லா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 81.


இவர் 1938ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பிறந்தார். சிறு வயது முதலே இசையின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் திரையுலகில் அவரை மிளிரச் செய்தது. ரசிகர்களால் அன்புடன் இன்னிசை ராணி என்று பாடகி நிர்மலா மிஸ்ரா அழைக்கப்பட்டார். ஒடியா இசைக்கு வாழ்நாள் பங்களிப்பிற்காக சங்கீத் சுதாகர் பாலக்ருஷ்ண தாஸ் விருதைப் பெற்றுள்ளார். 

நிர்மலா மிஸ்ரா
கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பாடகி நிர்மலா மிஸ்ரா வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.

பாடகி நிர்மலா மிஸ்ராவின் திடீர் மறைவு பெங்காலி மற்றும் ஒடியா திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாடகி நிர்மலா மிஸ்ராவின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web