பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் மரணம்! 32 வயசுல காலமான சோகம்!

 
kalyani

பிரபல மராத்தி மொழி சின்னத்திரை நடிகை கல்யாணி குராலே ஜாதவ் (32) சாலை விபத்தில் காலமானார். சின்னத்திரைத் தொடர்களில் நடிக்கத் துவங்கி, ரசிகர்களிடையே பிரபலமடைந்த பின்னரும், தான் ஆரம்ப காலத்தில் வைத்திருந்த உணவகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார் கல்யாணி . 'துஜ்யத் ஜீவ் ரங்களா' மற்றும் 'தக்கஞ்சா ராஜா ஜோதிபா' போன்ற மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமானவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). 

கடந்த சனிக்கிழமை இரவு அவருடைய உணவகத்தை மூடி விட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​கோலாப்பூர் நகருக்கு அருகே அவரது இருசக்கர வாகனத்தை, பின்னால் இருந்து வேகமாக வந்த கான்கிரீட் டிராக்டர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்யாணியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். 

kalyani

கோலாப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஷிரோலி எம்ஐடிசி காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின் படி, கோலாப்பூர் நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைல் உள்ள ஹலோண்டி கிராமத்தில் இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. 

கோலாப்பூர் நகரில் உள்ள ராஜாராம்புரி பகுதியைச் சேர்ந்த கல்யாணி ஜாதவ், விபத்து நடந்த நாளில் உணவகத்தை மூடி விட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியது. இதன் காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிராக்டரின் ஓட்டுநருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஷிரோலி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சாகர் பாட்டீல் தெரிவித்துள்ளார். விபத்துக்கு சிலமணி நேரம் முன்பு கூட தனது உணவகத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கல்யாணி பகிர்ந்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web