ரசிகர்கள் கொண்டாட்டம்! ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம்!! முகமது சிராஜ் அசத்தல்!!

 
முகம்மது சிராஜ்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். . இவர்  ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில்  முதலிடத்தை  பிடித்து அசத்தல் சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு காயம் ஏற்பட்டு அணியில் இடம்பெற முடியாத நிலையில் பும்ராவிற்கு பதில் சேர்க்கப்பட்டவர் தான் இந்த  முகமது சிராஜ்.

முகம்மது சிராஜ்

இவர்  தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி கொணடதுடன் இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிகவும் பக்கபலமாகவும் செயல்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.வேகத்துடன்  ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்களையும் எடுத்து  சிறப்பாக விளையாடி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். முகமது சிராஜ் 20 போட்டிகளில் 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

முகம்மது சிராஜ்


இவர் ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்தை தட்டி பறித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக  ஜோஷ் ஹேசில்வுட் 727 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web