ஒரே நேரத்தில் 3 மகள்களையும் காவலர்களாக்கிய விவசாய தந்தை! நெகிழ்ச்சி!

 
3 மகள்கள்

ஒரே சமயத்தில், தனது மூன்று மகள்களையும் காவலர்களாக்கி அழகு பார்த்து நெகிழ வைத்திருக்கிறார் விவசாய தந்தை. இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு முதல் வாழ்த்தை தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கூறியுள்ளார். பலமுறை தோல்வியுற்ற பிறகும் விடாமுயற்சி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ஒரே சமயத்தில் காவலர்களான ஆச்சரிய சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கீழ்ஆவதாரம் என்கிற கிராமத்தில் வெங்கடேசன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சசிகலா கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

3 மகள்கள்

மனைவி உயிரிழந்த நிலையில் அவரது மகள்களான ப்ரீத்தி (27), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) மற்றும் கார்த்திகேயன் (20) என்ற 4 பிள்ளைகளையும் அவர் தனி மனிதனாக வளர்த்து வருகிறார். அனைவரையும் வெங்கடேசன் கல்லூரியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை படிக்க வைத்து அந்த ஊர்மக்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

இவர்களில் மூத்த மகளான ப்ரீத்தி பிளஸ்2 முடித்த பிறகு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில் மற்ற 2 மகள்களையும் பெண் காவலர்களாக்க வேண்டும் என்று வெங்கடேசன் கடுமையாக உழைத்து காவலர் தேர்வில் பங்குபெற செய்தார். ஆனால் அவர்கள் தோல்வி பெற்றனர். இதற்கிடையில் 3 பெண் பிள்ளைகளையும் எப்படியாவது பெண் காவலர்களாக மாற்ற வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடிய வெங்கடேசன் தற்போது வெற்றி கண்டுள்ளார்.

3 மகள்கள்

காவலர் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற  ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி ஆகிய 3 பேரும் காவலர் பயிற்சியையும் சிறப்பாக முடித்துள்ளனர். தாயை இழந்த பெண் 3 பெண் பிள்ளைகளை நன்றாக பராமரித்து வளர்த்து அவர்களை பெண் காவலர்களாக்க உயர்த்திய வெங்கடேசனை அந்த ஊர்மக்கள் பாராட்டி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web