வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்! 300 பன்றிகளைக் கொல்ல உத்தரவு!

 
பன்றிக் காய்ச்சல்

கேரளாவில் பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளில் இரண்டு பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பண்ணைகளிலும் உள்ள 300 பன்றிகளைக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.. என கடவுள் நினைத்திருப்பார் போல. மூணு பக்கமும் இயற்கை வளத்தோட கேரளாவை ஆசீர்வதித்து, கடவுளின் தேசம்னு கொண்டாடப்படுகிற கேரளாவுக்கு இது போதாத காலம் போல. கொரோனா, கொட்டித் தீர்க்கிற மழை, கரைபுரண்டு ஓடுகிற வெள்ளம், நிலச்சரிவு, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், குரங்கு அம்மை என இயற்கை சீற்றங்களில் சிக்கி அழியும் கேரளாவில், தற்போது புதுசாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. ஆமாம்... கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று பரவி உள்ளதை தற்போது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனியாரம் எனும் பகுதியில் 5 பன்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக  உயிரிழந்தன. இதனால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறையினர் அவற்றின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூர் வந்த தென் ஆப்பிரிக்க பயணிகள் 10 பேர் தலைமறைவு:  தேடும் பணிகள் தீவிரம்

இதனால் கேரள மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அம்மாநில சுகாதாரத்துறை அதிரடியாக திட்டங்களை தீட்டி வருகிறது.

ஆப்பிரிக்க பன்றி காயச்சல் மனிதர்களுக்கு தொற்றாது என்று கூறப்படும் போதிலும், பன்றியில் இருந்து மனிதர்கள் மூலமாக மற்ற விலங்களுக்கு பரவும் என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் முதல் முதலாக கடந்த 1920ம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது.

தடுப்பூசி

கேரளாவுக்கு முன்பே இதே போன்று கடந்த வாரம் அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிகளை வளர்த்து வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தங்கள் பண்ணைகளில் மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது, கேரளாவில் இரண்டு பன்றி பண்ணைகளில் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பன்றி காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்க இந்த இரண்டு பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web