மீண்டும் திருவிழா! முதல் முறையாக தமிழகத்தில் ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ இன்று துவங்குகிறது!

 
பட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா இன்று மாமல்லபுரத்தில் துவங்குகிறது. சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில், மாமல்லபுரம் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து, சர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று துவங்கி முதல் 3 நாட்கள் நடக்கிறது. சர்வதேச பட்டம் விடும் திருவிழா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை நடைபெற்று வந்தது. தற்போது முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த திருவிழா ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை மூன்று நாள்கள் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உள்பட உலகம் முழுவதும் இருந்து சுமார் 100 நாடுகளிலிருந்து பட்டம் விடும் குழுக்கள் பங்கேற்க உள்ளன.

பட்டம்

இந்த விழாவிற்காக மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலை அருகே உள்ள 15 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான மேடைகள், மின்விளக்குகள், வாகனங்கள் செல்ல சாலை வசதிகள் ஆகியவற்றை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டம்

இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். எனினும், தனிநபர் யாரும் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web