ரெயிலில் தீ விபத்து… பீதியில் அலறிய பயணிகள்….

 
தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் சந்திப்பு அருகே சென்னை நோக்கி சென்ற நவஜீவன் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் நேற்று இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகே வந்துகொண்டிருந்த போது  உணவு தயாரிக்கும் பெட்டியில் இருந்து  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு

இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பதறினர்.    இதனையறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக நவஜீவன் விரைவு ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

சோழன் ரயில்

அதிகாரிகளின் துரித நடவடிக்கையால்   பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓடும் ரயிலில் தீ பிடித்த சம்பவத்தால் ரயில் பயணிகளிடையே சற்று பீதி நிலவியது.

From around the web