சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயது முதியவர் மரணம்!! முதல்வர் இரங்கல்!!

 
ஷ்யாம்

இமாச்சலப் பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஷியாம் சரண் நேகி என்ற 106 வயதான முதியவர் வசித்து வந்தார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றவர்.இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆளும்கட்சியாக இருந்து வரும்ந நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க.& காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஷ்யாம்

அதன்படி தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் 100 வயதை கடந்த 1,190 வாக்காளர்களும்  தபாலில் வாக்களிக்க உள்ளதால் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.இவர்களில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி கடந்த 2ம் தேதி தபால் வாக்கை செலுத்தினார். அவரின் இல்லம் தேடி தேர்தல் ஆணையம் சிவப்பு கம்பளத்தால் முழு மரியாதை வழங்கி வாக்குப்பதிவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் ஷியாம் சரண் நேகி வாக்கு மையத்திலேயே வந்து வாக்களிக்க முயற்சித்த நிலையில் அவரது உடல்நிலை கைகொடுக்கவில்லை.

ஷ்யாம்

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஷியாம் சரண் நேகி தனது சொந்த ஊரில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு இமாச்சலபிரேதச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கின்னார் நகர துணை ஆணையாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web