மிதக்குது சென்னை! அவசரகாலத்துல இந்த தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்துங்க!

 
கனமழை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இந்த மழைக்கு எல்லாம் சென்னை முழுவதுமே மிதந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதிசயமாய் தி.நகர் போன்ற இடங்களில் இந்த மழைக்கு வெள்ள நீர் தேங்கவில்லை. ஆனால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் நீர் இன்னும் வடியவில்லை. இந்த மழைக்காலத்துல ரொம்ப பத்திரமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க மக்களே.. வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 29 தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை தொடர துவங்கியது.

இந்த மழை நீரை எல்லாம் பாழ்படுத்தாது, நேர்மையாக சேமித்து வைத்தால், நாம் தண்ணீருக்காக கேரளாவிடமும், கர்நாடகாவிடமும் கையேந்த தேவையே இல்லை. அரசல் புரசலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புண்ணியத்தில் மழைநீர் சேமிப்பு இந்த முறையும் கை கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. நவம்பர் 14ம் தேதி வரை இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

சென்னையை பொறுத்தவரை தொடர் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளன. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர் சென்னை கார்பரேஷன் அறிவித்திருக்கும் முக்கிய தொலைப்பேசி எண்களை உங்கள் செல்போனில் சேமித்து வைத்துக் கொள்ளுங்க. சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியும் உங்க குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கியிருந்தால், இவர்களுக்கு தொலைப்பேசியில் அழைத்து சொல்லலாம்.

வெள்ளம்

சென்னை முழுவதும் ஆங்காங்கே மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மின் மோட்டர் உதவியுடன் நீரை வெளியேற்றவும் இவர்களை அழைக்கலாம். கனமழையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவசரகால தொலைபேசி எண்கள் 044-25619206, 044- 25619207, 044-25619208  . இந்த எண்களில் தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் உங்கள் தேவைகளையும், புகார்களையும் தெரிவிக்கலாம். மேலும் 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் அப்  மூலமும்  தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீரினால், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web