மிதக்கும் சென்னை!! வெள்ளக்காடான சாலைகள்!! தத்தளிக்கும் பொதுமக்கள்!!

 
மிதக்கும் சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் பல பகுதிகளில் நேற்று முதல் அதிகனமழை வெளுத்துவாங்கி வருகிறது. மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இன்று தொடங்கிய கனமழை 4ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மழை நீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு பருவமழையின் போதும் அதிகமாக பாதிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 

இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!
இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் அடை மழை கொட்டி வருகிறது. அதன்படி எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கனமழை தொடரும்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது, மரம் விழுந்து கிடப்பது, மின்வெட்டு அல்லது மின்கசிவு உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை 1913, 044-25619206, 044-25619207, 044-25619208. இந்த எண்களில் பொது மக்கள் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். 

சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான ‘‘நம்ம சென்னை செயலி’ மூலமாகவும் பொது மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web