மிதக்கும் சீர்காழி..!! மூட்டை முடிச்சுகளுடன் ஊரை விட்டு வெளியேறும் பொதுமக்கள்!!

 
சீர்காழி

தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29 முதல் பெருமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதை அடுத்து கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பல பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து தீர்த்துள்ளது. அதில்  மழை வெள்ளத்தில் மிதக்கும் நகரமாக உருவெடுத்திருப்பது  சீர்காழி. 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இங்கு கடந்த 3 நாட்களாக  தொடர்ந்து பெய்து வரும் மழையின் கோரத்தாண்டவத்தால்  வெள்ளத்தில் மிதக்கின்றன.

சீர்காழி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்ட ஆகிய மாவட்டங்களில் பெருமழையாக பெய்துக் கொண்டிருந்த நிலையில்  வலுவடைந்து சற்று நகர்ந்து, கடலூர், டெல்டா மாவட்டங்களை  சுழற்றி அடித்தது. இதன் விளைவாக டெல்டா  மற்றும்  மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகனமழை பெய்துள்ளது. இதில் சீர்காழியை மழை ஊர், மயிலாடுதுறையை மழை மாவட்டம் என்று அழைக்கும் அளவுக்கு மழை பெய்து தீர்த்து வருகிறது. சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு, நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டும் வெறும் 14 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சீர்காழியின் பல பகுதிகள்  வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்கள் ஏரிகளாகவும், அவற்றில் இருக்கும் வீடுகள், மிதவைகள் போலவும் காட்சி அளிக்கின்றன.  வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விட்டதை அடுத்து  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால்  மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர் . அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.  தற்போது முழுவீச்சில் நிவாரணப்பணிகள் மற்றும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மிக கனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கை  அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால்  பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியும் உள்ளன. இதனால் விவசாயிகள்,  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது, மின் கம்பங்களை தொடக்கூடாது  என விழிப்புணர்வு வாசகங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையின் அளவிற்கு ஈடான  மழை கடந்த 3 நாட்களில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மழை வெள்ளம், மீட்பு, மரங்கள் , மின்கம்பங்கள் சாய்தல் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு  அவசர அழைப்பு  எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி  பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அல்லது  8148917588 என்ற எண்ணில்  வாட்ஸ்அப்  மூலமும்  புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களின் அழைப்புக்கள் அனைத்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web