10 நாட்கள் கொலை செய்வதற்காக பின் தொடர்ந்தேன்!! சத்யாவை ரயில் முன் தள்ளிய சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!!

 
சத்யா சதீஷ்

சென்னையில் அக்டோபர் 13ம் தேதி சத்யா என்ற கல்லூரி மாணவியை காதலன் சதீஷ் ரயிலில் தள்ளி கொலை செய்தார். இந்த கோர கொலை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சதீஷை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் சம்பவங்களை சதீஷ் வாக்குமூலமாக  கொடுத்துள்ளார்.  சத்யா கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டார். 

ரயில் முன் கொலை

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை அதிகாரியாக சி.பி.சிஐ.டி காவல் ஆய்வாளர் ரம்யா நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கொலையாளி சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த முறை சதீஷை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது வழக்கறிஞர்கள் தாக்க முயன்ற சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி நீதிமன்ற விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்நிலையில் மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கொலையாளி சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் மட்டுமே காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டார்.

சத்யா

சத்யா கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷை, காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், 10 நாள்கள் பின்தொடர்ந்து சென்று கடைசியாக சத்யாவைக்  கொன்றதாக கூறியுள்ளார்.சதீஷ் மேலும் கூறியிருப்பதாவது, சத்யாவை தான் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால், அவரது பெற்றோர் சத்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றதால், கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

சத்யாவின் தாய் கூறியதால் தன்னுடன் பேசுவதை சத்யா நிறுத்தி விட்டதார். மேலும் தினமும் சத்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்றேன். காதலியை கொலை செய்ய  மனமில்லாமல் 10 நாள்களாக சத்யாவை பின்தொடர்ந்து சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டேன். அக்டோபர் 13ம் தேதி வேறு வழியில்லாமல் தான் அவரை  ரயில் முன் தள்ளிக் கொலை செய்ததாகவும் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web