அடி தூள்!! கருவிழி பதிவின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம்!!

 
கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

தமிழகத்தில்  மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய நடுத்தர மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். உணவுப் பொருள் அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான நடைமுறைகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

அதில் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ள  மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. இதனை களையும் வகையில்  மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை விரைவில் அமுலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரேஷன்
மேலும் தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் அனைத்திலும் கழிவறை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் . ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும்போது வரிசையில் காத்திருக்க வேண்டிய நேரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க  அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web