அடி தூள்!! இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் உறுதி!!

 
ரவிக்குமார் தஹியா

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற்று வருகிறது.

காமன்வெல்த்

இந்நிலையில், காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில் இவர்  பாகிஸ்தான் வீரர் அசாத் அலியை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் ரவிக்குமார் தஹியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

காமன்வெல்த்

இந்தப் போட்டியில் முதல் சுற்றில் முடிவில் இரு வீரர்களும் தலா 2 புள்ளிகளை பெற்று இருந்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் ரவிக்குமார் தஹியா சிறப்பாக விளையாட தொடங்கினார். அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்தார். இறுதியில் 14-4 என்ற கணக்கில் ரவிக்குமார் தஹியா பாகிஸ்தான் வீரரை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இதன்மூலம் காமன்வெல்த் 2022 மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 8வது பதக்கத்தை ரவிக்குமார் தஹியா உறுதி செய்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web