அடி தூள்!! பள்ளிகளில் காலை சிற்றுண்டி!! அரசாணை வெளியீடு!!

 
சிற்றுண்டி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், கல்வி கற்றலை எளிமையாக்கவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக  அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.  

அரசாணை

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.  நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும். உடல்நலனை மாணவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.மாணவர்களே உங்கள் தாயாக , தந்தையாக இருந்து வேண்டுகோள் விடுக்கிறேன்.  நான் மாணவர்களிடம் உரையாடிய போது 5 பேரிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என்று கேட்டேன்.

சத்துணவு

அதில் 3 பேர் காலை உணவு சாப்பிடவில்லை என்று கூறினர். நான் கூட கல்லூரிப் பருவத்தில் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று சாப்பிடாமல் செல்வேன். மாணவர்கள் யாரும் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரக்கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் திட்ட அரசாணைக்கு கையொப்பமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web