அடி தூள் !! இன்று முதல் பள்ளிகள் சிற்பி திட்டம் !! முதல்வர் தொடங்கி வைப்பு!!

 
சிற்பி


தமிழகத்தில் பள்ளிகளில்  பல்வேறு அதிரடி திட்ட செயல்பாடுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் கற்றல்திறனை மேம்படுத்தவும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

மாணவர்கள்
அதே நேரத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு சார்பில் காவல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அதன் ஒரு பகுதியாக சிறார்கள் நல்வழிப்படுத்துவதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து வழி காட்டவும், சென்னையில் பள்ளிகளீல் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை  ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

காவலன்
சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காண்பது மட்டுமல்ல அவர்களை நல்வழிப்படுத்த தகுந்த  வழிகாட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கம். முதற்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் படி 8ம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்படும்.

 

அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சிற்பியில் இணைந்த மாணவர்கள் உறுதிமொழி  ஏற்பார்கள். இதன்படி இன்று முதல்வரின் முன்னிலையில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். இத்திட்டம் தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவு படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்களுக்கு அவசர கால  உதவி எண்களான காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் இவைகளை தெரியப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web