அடி தூள்!! இந்தியாவில் விரைவில் ஸ்கைபஸ்!! தினம், தினம் பறக்கலாம்!!

 
ஸ்கைபஸ்

 

இந்தியாவில் விரைவில் ‘ஸ்கைபஸ்’ எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

ஸ்கைபஸ்

 ‘ஸ்கைபஸ்’ என்பது மெட்ரோ ரயில் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தலாம். இதனால் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் ஸ்கைபஸ் சேவை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க விரும்புகிறோம் " என தெரிவித்துள்ளார். 

நிதின் கட்காரி

டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இந்த சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவில் எரிபொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாக குறைப்பதே தனது கனவு என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web