அடி தூள்!! அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமிரா!! யுஜிசி அதிரடி !!

 
கல்லூரி மாணவிகள்

சமீபகாலமாக கல்லூரி மாணவிகளிடையே தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கல்வி நிர்வாகங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரிகளில் மாணவர்களிடையே நடைபெறும் அத்துமீறல்கள், வன்முறை செயல்கள், குற்றச்செயல்களை உடனுக்குடன் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

மேலும் மாணவர்கள் தங்களுக்குள் ராகிங் செய்து கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையிலும், ராகிங்கை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும் யுஜிசி அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இணையதளத்தில், ‘‘ராகிங்கில் ஈடுபடமாட்டேன்’’ என்று பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கல்லூரி வளாகம் மற்றும் ஒவ்வொரு வகுப்பறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் ராகிங்கை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு  வாசகங்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கல்லூரி மாணவிகள்

இது போன்ற முக்கிய நிபந்தனைகளை யுஜிசி நாடு முழுவதும் செயல்படும் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதுஇது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ராகிங் ஒழிக்கப்பட்டு,  அனைத்து பயிலகங்களிலும் ஒழுக்கம் சீர்படும் என்றும், கல்வி மேம்படும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web