அடி தூள்!! 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள்!! அதிரடி உத்தரவு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் கல்வித்துறையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் புதிய மாற்றங்களும், பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காலை சிற்றுண்டி திட்டம், ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்  என  பல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அதே போல் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மாற்றவும் தமிழக  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஸ்டாலின்


இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை தவிர மாணவர்களுக்கு புதிய அணுகுமுறையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அரசு அறிவித்துள்ள தகைசால் பள்ளிகள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் அமையும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள்
தகைசால் பள்ளிகளில் அனைத்து வசதிகள் கொண்ட நூலகம் மற்றும் கடமை உணர்வோடு பணிபுரியும்  நூலக ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் முன்னேற்றத்தை உருவாக்கி மனநலமும், உடல் நலமும் பேணப்படும். கலைகள், நாடகங்கள் மற்றும் இசை ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தன்னம்பிக்கையும் வெளிப்பட்டு திறனும் வளர்க்கப்படும். அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு  அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். நடப்பு கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி உட்பட  15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இத்திட்டம் மாணவர்கள் , பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web