அடி தூள்!! இன்று தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் !!

 
வந்தே பாரத்

இந்தியாவை பொறுத்தவரை தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும்  ரயில்களையே தேர்வு செய்கின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்தியா  முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். தொலைதூர பயணங்களுக்கு சொகுசு மற்றும் பாதுகாப்பான சேவை அளிப்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்கள் கூட ரயில் பயணங்களையே விரும்புகின்றனர்.



இதன் அடிப்படையில்  இந்தியன் ரயில்வே அவ்வப்போது அதன் வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 5வது ஆக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

வந்தே பாரத்

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 11ம் தேதி  வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நடத்தப்பட்டது. தென் இந்தியாவிலிருந்து செல்லும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 75-77கி.மீ வரை செல்லும்.  சென்னையிலிருந்து மைசூரு செல்ல  மொத்த தூரமான 504 கி.மீ தொலைவை 6மணிநேரம் 30நிமிடத்தில் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web