அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உயிரிழப்பு!! தலைவர்கள் இரங்கல்!!

 
ஜிம்மி கார்ட்டர்.

அமெரிக்காவின்  முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர். இவருக்கு வயது 98. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 76 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இவர் அமெரிக்காவின் 39வது அதிபராக நீண்டகாலம் அதிபர்  பதவி வகித்தவர். இவர்  2002ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். இவர் உயிரிழந்து விட்டதாக கார்ட்டர் மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜிம்மி கார்ட்டர் 1924ல் அக்டோபர் 1ம் தேதி ஜார்ஜியா மாநிலத்தில்  சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.  1946ல்  யுனைடெட் ஸ்டேட்ஸ் நேவல் அகாடமியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று  அமெரிக்க கடற்படையில் சேர்ந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றினார்.

ஜிம்மி கார்ட்டர்.
1953ல்  தந்தையை இழந்தபின் குடும்பத்தொழிலான விவசாயத்துக்கு திரும்பினார்.  அவரின் சகோதரர்களுக்கு இடையே சொத்து தகராறு காரணமாக அதை விடுத்து தனியாக வணிகத்தில் இறங்கினார். அதன்மூலம் குடும்பத்தின் கடலைப் பண்ணையை விரிவுபடுத்தி வளர்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதன்பின்னர் அரசியலில் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக சேர்ந்து  அதிபர் வரை  பல்வேறு பதவிகளை வகித்தார்.  1963 முதல் 1967 வரை ஜார்ஜியா மாநில செனட்டராகவும்,  1970 ல் ஜார்ஜியாவின் ஆளுநராகவும் பதவி வகித்தார்.  1975 வரை அதே பதவியில் நீடித்தார்.  1976 ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி பெரும் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 


ட்நாம் போர் வரைவு ஏய்ப்பாளர்களையும் மன்னித்தார் . அவரது பதவிக்காலத்தில் தான்  எரிசக்தி துறை மற்றும் கல்வித்துறை, பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பம் இவைகளை உள்ளடக்கிய தேசிய எரிசக்திக் கொள்கையை  உருவாக்கினார்.1981ல்  ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி, 1979 ஆற்றல் நெருக்கடி, மூன்று மைல் தீவு அணுசக்தி விபத்து, நிகரகுவான் புரட்சி மற்றும் ஆப்கானிஸ்தானின் சோவியத் படையெடுப்பு இவைகளால் அவரது அதிபர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு  என தனியாக ஒரு நீதிபதியை நியமிக்காமல் அதிபர் பதவியில் இருந்த போது அவரே தான் நீதிபதியாக இருந்து வந்தார். ஜிம்மி  கார்ட்டர் 1980 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ரீகனிடம் தேர்தலில் தோல்வியை தழுவினார். 

rip
1982ல்  கார்ட்டர் மனித உரிமைகளை மேம்பாடு, விரிவடைதல் அடிப்படையில்  கார்ட்டர் மையத்தை நிறுவினார்.  ஜிம்மி கார்ட்டரின் மனிதாபிமான பணியை பாராட்டி, உலகின் சிறந்த விருதான நோபல் பரிசு அவரது அமைதிக்கான பணிக்காக வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் போர் மேகங்கள் சூழப்பட்ட நாடுகளில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தவும், தேர்தல்களை கண்காணிக்கவும், வளரும் நாடுகளில் நோய் தடுப்பு மற்றும் ஒழிப்பை முன்னெடுத்துச் செல்லவும்  நெடும்பயணங்களை செய்தவர்.  கார்ட்டர்  அரசியல் நினைவுக் குறிப்புகள் முதல் கவிதைகள் வரை 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  

From around the web