முன்னாள் கூடைப்பந்தாட்ட கேப்டன் காலமானார்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…

 
அப்பாஸ் மூன்டாசார்

மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் அப்பாஸ் மூன்டாசார். இவருக்கு வயது 82. இவர் அறுபது, எழுபதுகளில் நட்சத்திரமாக ஜொலித்தவர்.   மக்களை கவரும் திறனாலும் அதிக துள்ளலுடன்   விளையாடி ரசிகர்களை வெகுவாக கவந்தார் அப்பாஸ் மூன்டாசார்.  கூடைப்பந்தாட்டத்தில் டெக்னிகலாக கூறப்படும் டிபன்டர் நாஸ்ட்ரில் அல்லது ஸ்கிம்மிங் அரவுண்ட் த க்னீ போன்றவற்றில் அதிக அளவு பாயிண்டுகளை அப்பாஸ் மூன்டாசார் குவித்துள்ளார்.

அப்பாஸ் மூன்டாசார்

இவரது ஆட்டத்தை பார்க்கும் நடுவர்கள் விதி புத்தகங்களை பார்த்து மதிப்பளிப்பார்கள். அதுமட்டுமின்றி நடுவர்கள் இவர் ஆட்டைத்தை கண்டு மலைத்துப்போவார்களாம். இவர் இந்திய அளவில் டொமஸ்டிக் ஆட்டத்தில் விளையாடிய 10 ஆட்டங்களில் 9ல் பட்டங்களை வென்று இந்தியாவின் மிகச் சிறந்த கூடைபந்தாட்ட வீரர் என்ற பாராட்டு பெற்றுள்ளார்.  

அப்பாஸ் மூன்டாசார்

  

கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அப்பாஸ் மூன்டாசார் இரண்டு நாட்கள் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  இவரது இழப்பு கூடைப்பந்தாட்ட வீரர்கள் மட்டுமின்றி அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

From around the web