இந்திய கிரிக்கெட் வீரரிடம் ரூ.44 லட்சம் மோசடி !

 
money

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி பிறந்த உமேஷ் யாதவ், கடந்த 2010 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார்.

இதே போன்று 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 போட்டியில் அறிமுகமனார். இப்படி அனைத்து போட்டிகளிலும் உமேஷ் யாதவ் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

money

உமேஷ் யாதவ் தனது நண்பா் சைலேஷ் தாக்கரே என்பவரை தன்னுடைய மேலாளராக நியமித்தாா். உமேஷ் யாதவின் வங்கிக் கணக்கு, வருமான வரி மற்றும் நிதிசாா் செயல்பாடுகளை சைலேஷ் தாக்கரே கவனித்து வந்தாா்.இந்நிலையில், நாகபுரியில் மனை வாங்க விரும்பிய உமேஷ் யாதவ், இது குறித்து சைலேஷ் தாக்கரேயிடம் தெரிவித்துள்ளாா். காலி மனை குறித்து உமேஷ் யாதவிடம் தகவல் தெரிவித்த சைலேஷ், அந்த மனையை வாங்க ரூ.44 லட்சத்தைக் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, சைலேஷின் வங்கி கணக்கில் ரூ.44 லட்சத்தை உமேஷ் யாதவ் டெபாசிட் செய்துள்ளாா். குறிப்பிட்ட நிலத்தைத் தனது பெயரில் வாங்கிய சைலேஷ் தாக்கரே, இது குறித்து உமேஷ் யாதவிடம் தகவல் தெரிவிக்கவில்லை.

money

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உமேஷ் யாதவ், நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றும்படி சைலேஷிடம் கேட்டுள்ளாா். அதற்கு ஒப்புக்கொள்ளாததுடன், பணத்தை திரும்ப ஒப்படைக்கவும் சைலேஷ் மறுத்துவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக கொரடி காவல் நிலையத்தில் உமேஷ் யாதவ் புகாரளித்தாா். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் மற்றும் சொத்தை முறைகேடாக இணைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் சைலேஷ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்தனா். பிரபல கிரிக்கெட் வீரரை அவரது நண்பரும் செயலாளருமாக இருந்தவரே திருடியது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

From around the web