பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி.. தாய் மீது மகன் அளித்த புகாரால் பரபரப்பு !

 
இசக்கியம்மாள்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள்.  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இசக்கியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பணகுடி காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவருடன் இசக்கியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ணனின் மனைவி கண்டித்துள்ளார். 

இந்த நிலையில் இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும் இசக்கியம்மாளும் கண்ணனும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும் தெரிகிறது. 

இசக்கியம்மாள்

இந்த சூழலில் இசக்கியம்மாள் வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நபர்களிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து பணம் கொடுத்தவர்கள் கேட்டால், பொறுமையாக இருந்தால் வேலை கிடைத்துவிடும், அப்போது அனுப்பிவைப்பேன் எனக்கூறி வந்துள்ளார்.

எனினும் அவர் ஏமாற்றுவதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. போலீசார் விசாரணை வளையத்துக்குள் வருவதை அறிந்த கண்ணன் மற்றும் இசக்கியம்மாள் இருவரும் தலைமறைவாகினர். 

இசக்கியம்மாள்

இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இசக்கியம்மாளின்  மகன் ஸ்டாலினுடன்  அவர்களுடன் வந்து தனது தாயார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், தனது தாய் இசக்கியம்மாள் தென்காசி, நெல்லை, சென்னை என பல மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இது போன்று மோசடி செய்துள்ளார். கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றி இருப்பார். இது தவறு என அவரிடம் சுட்டி காட்டினால் என்னையும் மிரட்டி அடிக்க திட்டமிட்டு தேடி வருகின்றனர். இந்த உண்மையை எங்கு வேண்டுமானாலும் கூறுவேன் என தெரிவித்தார்.

From around the web