உடற்பயிற்சி செய்தால் இலவச பேருந்து டிக்கெட்!! இது நல்லா இருக்கே!!
Dec 15, 2022, 11:40 IST
ருமேனியா நாட்டில் குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்பட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். இந்த உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன் இலவச பேருந்து சீட்டை இயந்திரம் வழங்குகிறது.

இதன் மூலம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இலவசமாக பேருந்து சீட்டும் கிடைக்கிறது. மேலும் பொது மக்களை ஆரோக்கியத்துடன் வைப்பதற்காக ருமேனியாவில் இம்முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
