திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து!! தேவஸ்தானம் அதிரடி!!

 
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

நாளை நவம்பர் 8ம் தேதி ஐப்பசி பௌர்ணமி. அதே நேரத்தில் சந்திரகிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் சந்திர கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். கடந்த வாரம் 25-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருந்தாலும் மாலையில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் பகுதி நேர சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். பொதுவாக கிரகண நேரங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் தோஷம் காரணமாக பல கோவில்களில் நடை அடைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நாளை சந்திரகிரகணம் நிகழவுள்ளதால் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் அந்த நேரத்துக்கான கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

மேலும் இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. ரூ.300 தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்படும். அதற்கு பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!