ஜி. கே. வாசன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் விலை . மின் கட்டண  உயர்வு மற்றும் சொத்துவரிஉயர்வு குறைக்க வேண்டும் என வலியுறுத்தல் 
 

பால் விலை , மின்சார கட்டணம்  மற்றும் சொத்து வரி ஆகியவற்றை உயர்த்திய    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜி கே வாசன் மக்களுக்கு கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்றாமல்
 திமுக அரசு கடந்த 18 மாதங்களாக மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ஜிகே வாசன் தமிழகத்தில் ஊயர்த்தயுள்ள பால் விலை . மின் கட்டண  உயர்வு மற்றும் சொத்துவரிஉயர்வு ஆகிய வற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென வலியூறுத்தினார்.

 மயிலாடுதுறையில் மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளின் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையை ஐந்து ஆயிரம் ஆக உயர்த்தி   வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் அமையும் என்றும் அதேபோல் தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான அலை அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் அதிமுக தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் ஜி கே வாசன் தெரிவித்தார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலை மின் கட்டணம் சொத்து வரி கட்டணம் ஆகியவற்றை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

From around the web