ஓடும் ரயிலில் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்.. டிடிஇ கைது !

 
rape

ரயில்வே டிக்கெட் பரிசோதகரே ரயிலில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியை 30 வயது பெண் ஒருவர் தனது 2 வயது மகனுடன், ஜனவரி 16ஆம் தேதி டேராடூன் - பிரயாக்ராஜ் லிங்க் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் பொதுபெட்டியில் பயணம் செய்துவந்த நிலையில், இந்த பெண்ணுக்கு தெரிந்த டிக்கெட் பரிசோதகரான ராஜூ சிங் என்பவர் அந்த ரயிலில் பணியில் இருந்துள்ளார்.

அந்நேரம் அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் அங்கு வந்தார். அப்போது, பொதுப்பெட்டியில் பயணிக்க வேண்டாம், முன்பதிவு பெட்டியில் பயணிக்க உதவுவதாக டிக்கெட் பரிசோதகர் தெரிவித்துள்ளார். அதன்படி, டிடிஇ அப்பெண்ணை ஏசி கோச்சில் பயணிக்க சலுகை அளித்து உள்ளார். அவரை நம்பிய அப்பெண்ணும் தனது மகனுடன் அங்கு சென்று பயணிக்க தொடங்கினார்.

rape

இரவு 10 மணி அளவில் டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங், இரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க தேவைப்படும் எனக் கூறி பெண்ணிடம் குடிநீர் பாட்டில் கொடுத்துள்ளார்.அவர் அந்த குடிநீரில் மயக்க மருந்து கலந்திருந்த நிலையில், அதை குடித்த பெண் மயக்க நிலைக்கு சென்றார். இதன் பின்னர் டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங், மற்றொரு நபருடன் இணைந்த அந்த பெண்ணை ரயில் பெட்டியில் வைத்தே பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அப்பெண் அரை மயக்கத்தில் சத்தம் போட்டு கத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து மயக்கம் தெளிந்ததும் தனக்கு கொடுமை நேர்ந்திருப்பதை உணர்ந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். யாரிடமும் இதைபற்றி கூறவில்லை. பின்னர் சொந்த ஊருக்கு வந்த போது நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்தார்.

rape

உடனே அவர்கள் இது குறித்து ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்தனர். பின்னர் ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக எழுத்து மூலமும் புகார் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றொரு நபர் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் கூற முடியாத நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


 

From around the web