கௌதம் கார்த்திக் திருமணத் தேதி அறிவிப்பு!! களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

 
நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன்

தமிழ் திரையுலகில் 80களில் முண்ணனி கதாநாயகன்களில் பிரபல நடிகர் கார்த்திக் குறிப்பிடத்தக்கவர். இவரின்  மகன் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னத்த்தின்  'கடல்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு பின்  'இவன் தந்திரன்', 'ரங்கூன்', 'மிஸ்டர் சந்திரமவுலி' உட்பட  படங்களில் நடித்துள்ளார். 'தேவராட்டம்' படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார்.

நடிகர் கவுதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன்

அப்போது, கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினர். மஞ்சிமா மோகன் , 'அச்சம் என்பது மடமையடா', 'துக்ளக் தர்பார்', 'எப்.ஐ.ஆர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தங்கள் காதலை அதிகாரபூர்வமாக உறுதி செய்தனர்.

south indian marriage

தற்போது விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும்  திருமண தேதி முடிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நவம்பர்  28ம் தேதி நடக்க உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திரை பிரபலங்களை அழைத்து நடத்த இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web