நீட் தேர்வில் குளறுபடி? இது என்னுடைய விடைத்தாளே கிடையாது! உயர்நீதிமன்ற படியேறிய சென்னை மாணவி!

 
தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், நீட் தேர்வில் பயங்கர குளறுபடி நடைப்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வினால், தற்கொலைகள் செய்து கொண்ட நிலையில், சென்னை மாணவி ஒருவர், இது என்னுடைய விடைத்தாளே கிடையாது’ என்று நீட் தேர்வு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இத்தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல விடைத்தாள்கள் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே நீட் தேர்வு தொடர்பாகச் சென்னை சேர்ந்த மாணவி பவமிர்த்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

NEET

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி நீட் தேர்வில் தனது விடைத்தாள் மாறி விட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்வில் 720-க்கு 600-க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் 13 கேள்விகளுக்கு விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விடைத்தாளின் இடது புறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என மாணவி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

NEET

விடைத்தாளில் உள்ள கைரேகையைச் சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை இன்று விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மாணவியின் முக்கிய உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web