உலகம் முழுவதும் முடங்கிய ஜிமெயில் சேவை!! பயனர்கள் அவதி!!

 
ஜிமெயில்

பெரும்பாலான மக்கள் கூகுள் மற்றும் ஜிமெயில் சேவைகளை அன்றாடம் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உலக அளவில் சுமார் 150 கோடிய பயனர்கள் ஜிமெயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.  இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜிமெயில் சேவைகள் நேற்று உலகம் முழுவதும் முடங்கியதால் லட்சக்கணக்கான பயனளர்கள் பாதிப்பை சந்தித்தனர்.

ஜிமெயில்

பல பயனாளர்களுக்கு மெயில் அனுப்புவதிலும், பலருக்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் சில மணிநேரம் தவித்து போனார்கள். முதலில் தங்கள் கணினி, செல்போனில் தான் ஏதோ கோளாறு போல என்று நினைத்த பயனர்கள் இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவிய போது கூகுள் சர்வரில்தான் கோளாறு என்று புரிந்து கொண்டனர்.

ஜிமெயில்

மேலும் #GmailDown என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் தங்கள் வொர்க் ஸ்பேசில் ஜிமெயில் டவுன் ஆனதை உறுதி செய்தது. பின்னர் இரண்டு மணிநேரத்திற்குள்   சேவை இயல்பு நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது.  

From around the web