இந்தியாவின் தங்கமங்கை !! காமன்வெல்த் போட்டியில் பிவிசிந்து சாதனை!!

 
பிவிசிந்து


இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காமன்வெல்த் விளையாட்டு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பதக்க பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.

உலக பேட்மிண்டன் இறுதி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 2014 மற்றும் 2018 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதற்கு முன்னர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்ற சிந்து இந்த முறை தங்கப்பதக்கத்தை தட்டி தூக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிரம்பி இருந்தது.

பிவிசிந்து

அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜிய மின்னை 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளர். இறுதிப் போட்டியில் கனடா எதிர் கொண்ட பி.வி.சிந்து,  அவரை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web