தங்கம் விலை சரிவு! சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது!

 
தங்கம்

தங்கம் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி அதிரடியாய் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் நம்மளிடம் கடுகளவாவது நிச்சயம் தங்கம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை. 

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன.

தங்கம்

சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில், நேற்று மாலை அதிகரித்து விற்பனையானது. இந்நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்து விற்பனையாவதால், இல்லத்தரசிகள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.4,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,903-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து, ரூ.3,887-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.63,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web