தங்கம் விலை மீண்டும் சரிவு! சவரனுக்கு ரூ.240 குறைந்தது!

 
தங்கம்

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் தென்னிந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகம். அழகுக்காகவும் தங்கத்தை முதலீடு செய்வதிலும் அக்கறை காட்டுவதால் தினசரி தங்கத்தின் விலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தங்கம் அதிகம் வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 

தங்கம்
இந்நிலையில் தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.4,705க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.240 குறைந்து ரூ.37,640ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

ஒரு பவுன் தங்கம் ரூ.240 குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்து நகைக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web