தொடர் சரிவில் தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் உற்சாகம்!!

 
தங்கம்

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் உச்சத்தை தொட்டது. ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ1000க்கும் மேல் அதிகரித்தது. நேற்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 5ம் சவரனுக்கு ரூ40ம் விலை குறைந்துள்ளது.அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று நவம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,950க்கும், ஒரு  சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.39,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
நேற்றின் தொடர்ச்சியாக இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ரூ 5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ4945 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ40 குறைந்து ரூ.39560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின்  விலை தொடர்ந்து 2நாட்களாக சற்றே குறைந்துள்ளது ஆறுதலை அளித்துள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் தொடக்கத்திலிருந்தே படிப்படியாக உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்துள்ளது.

தங்கம்

சர்வதேச அளவில் பொருளாதாரச் சரிவு,  உக்ரைன் ரஷ்யா போர் சூழல், தங்கத்தின் மீதான இறக்குமதிவரி விதிப்பு  போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை குறையத் தொடங்கிய அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 20 பைசாக்கள் குறைந்து  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ67க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ67000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web