தங்கம் விலை அதிரடி குறைப்பு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
தங்கம்

இந்தியாவில் சர்வதேச தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணதங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அது முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் குறைந்த  ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அமைந்துள்ளது. அத்துடன் முதலீட்டாளர்களின் முதல் தேர்வாகவும் தங்கமே இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை ஆன நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் நகை பரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து, ரூ.4,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,854-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4 ரூபாய் குறைந்து, ரூ.3,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, ரூ.61,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web