தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! உற்சாகத்தில் இல்லத்தரசிகள்!!

 
தங்கம்

இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒரு நாள் தங்கத்தின் விலை குறைந்தபோதிலும் அடுத்த நாளே இருமடங்காக தங்கத்தின் விலை அதிகரித்து விடுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் , நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறி வருகின்றனர்.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கத்தின் மீதான முதலீடு பெரும் சேமிப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச விலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,715க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில்  வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு  50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.00க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.64,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web