தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்ய வரி விதிக்கப்பட்டது. அதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் குறையத் தொடங்கியது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இல்லத்தரசிகள் நகைக்கடைகளில் குவியத் தொடங்கினர்.

பெரும்பாலான மக்கள் விலைமதிப்பற்ற இந்த உலோகத்தை வாங்குவதை காட்டிலும், எளிதாக விற்று விடுகிறார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தை வாங்குவதும் விற்பதும் மிகவும் எளிதானது. சிறிய நகரங்களில் இருக்கும் பலருக்கு பங்குகளை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், தங்கம் என்றால் என்ன? அதை எப்படி விற்பது? எப்படி வாங்குவது? என்பது அவர்களுக்கு நன்றாக‌ தெரியும்.

தங்கம்

தங்கத்திற்கு சிறப்பானது என்பது தவிர, அதை பதுக்கி வைக்கவும் பலரும் வாங்குகிறார்கள். இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைந்ததுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.4,632-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, ரூ.37,056-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,801-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 7 ரூபாய் குறைந்து, ரூ.3,794-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web