தங்கம் அதிரடி விலைக் குறைப்பு!! நகைக்கடைகளில் குவியத் தொடங்கிய இல்லத்தரசிகள்!!

 
தங்கம்

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வளர்ச்சி விகிதமானது பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம், விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

தங்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து, ரூ.4,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.38,520-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,956-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து, ரூ.3,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.61,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web